» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)
திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 14ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"திருநெல்வேலி மாவட்டத்தில் 14.07.2025 அன்று, காலை 10.00 மணி முதல் 4.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
மேற்காணும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் 8, 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ பயின்று தேர்ச்சிப்பெற்ற பயிற்சியாளர்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞர்கள்/இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய/மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான இளைஞர்கள் / இளம்பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம்/12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் தொழிற் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநர்களை தேர்வு செய்யும் பொருட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பினை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-2342432 / 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பள்ளி வகுப்பறைகளில் மாற்றம்: இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
சனி 12, ஜூலை 2025 3:47:08 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)
