» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பதிலளித்த அமித் ஷா, 'தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆட்சியில் பாஜக பங்கு பெறும்' என்று கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே என்று அதிமுகவினர் கூறிவரும் நிலையில், ஆட்சியிலும் இருப்போம் என்று பாஜகவினர் கூறிவந்தனர். தற்போது அமித் ஷாவும் இதனை உறுதி செய்யும்விதமாக இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என்று கூறியுள்ளார். அமித் ஷாவின் கருத்தும் எடப்பாடி பழனிசாமியின் பதிலும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் குழப்பத்தில் இருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

பள்ளி வகுப்பறைகளில் மாற்றம்: இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
சனி 12, ஜூலை 2025 3:47:08 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)
