» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து வாழ்கிறாராம். மேலும், இவர் வேலை செய்து வரும் திரேஸ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் 2 பவுன் தங்க மோதிரங்கள் திருடு போயினவாம். வீட்டின் பெண் உரிமையாளர், இவர் மீது சந்தேகப்பட்டு, வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், மீனாவை ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது அவர் லெக்கின்ஸை கழிவறை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

பள்ளி வகுப்பறைகளில் மாற்றம்: இனி கடைசி பெஞ்ச் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
சனி 12, ஜூலை 2025 3:47:08 PM (IST)
