» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பாஜக, திமுக, திரிணமூல் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் பிகாரில் 'ஜன் சுராஜ்' என தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். தவெகவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து சில காலம் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிகார் பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல் முடிந்தபின்னர் அதாவது நவம்பருக்குப் பிறகே தவெக ஆலோசகராக மீண்டும் செயல்படுவது பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)

அரசு பேருந்தில் திடீரென மயங்கி சரிந்த ஓட்டுநர் : பயணிகள் தப்பினர் - தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 5, ஜூலை 2025 8:07:46 AM (IST)
