» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 7 ம் தேதி முதல் அவர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கான பாதுகாப்பு திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் என்பது நம் நாட்டின் 2வது உயர்ரக பாதுகாப்பாகும். பிரதமர் மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மோடிக்கு அடுத்தப்படியாக உள்ள உயர்ரக பாதுகாப்பு தான் இசட் பிளஸ் பாதுகாப்பாகும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோக்கள், 52 காவலர்கள் வரை இடம்பெறுவார்கள். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
