» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் காந்திநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் புதிய வாழ்கை வாழ டீயலெயn சு-ளுழுலுயு இணைந்து எட்டு இல்லங்களை நடத்தி வருகிறது. இந்த ‘மீண்டும்” இல்லத்தில் வாழ்ந்து வந்த பயனாளர் பாலேஸ்வர் யாதவ வயது 48. இவர் ஸ்கிசோப்ரினியா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை நுஊசுஊ குழுவினரால் 18.06.2022 அன்று மீட்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின் குடும்பம் பற்றிய தகவல் அப்போ தெரியாததால் 20.11.2023 அன்று திருநெல்வேலி ‘மீண்டும்” இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.
இவர் மிக விரைவாகவே இங்கு குணமாகி பழைய குடும்ப ஞாபங்களை ஒருங்கிணைப்பாளர் திவ்யாவிடம் பகிர ஆரம்பிக்க ஒருங்கிணைப்பாளர் திவ்யா பிஹாரில் கயா, உள்ள காவல்துறையை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார்கள். கயா காவல்துறை மூலம் அவரது குடும்பத்தினரையும் வீட்டு முகவரியை தேட உதவி கோரினார்கள்.
பல முறை பல நாள் முயற்சி வெற்றி கிடைத்தது எங்கள் முயற்சிகள் வீண்போகாமல் அவரது மனைவி அலோபதி யாதவ் மற்றும் அவரது மகள் ரீட்டா யாதவ் ஆகியோர் கயா காவல் நிலையத்தில் வீடியோ அழைப்பு மூலம் அவருடன் பேச முடிந்தது. அதன்பின் மகன் சனோஜ் குமார் மற்றும் உறவினர்கள் அணில், சஞ்சீவ் ஆகியோர்கள் திருநெல்வேலியில் இருப்பதாக தகவல் அறிந்து அவரை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
அவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு நான்கு குழந்தைகள் (3 ஆண் 1 பெண்) இருந்ததாகவும் சமீபத்தில் மூத்த மகன் சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டதாகவும் கூறினார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான பீகார் மாநிலம் கயா பகுதியை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது மகன் தனது தந்தையை உயிருடன் நேரில் பார்த்ததை நம்பமுடியாமல் கண்ணீர்விட்டார் கடவுளுக்கு நன்றி கூறினார்.
பாலேஸ்வரர் யாதவ் அவர்களை பீகாரில் இருந்து இன்று வந்து அவரது மகன் மற்றும் உறுவினர்களிடம் குடும்ப நிலை பற்றி கேட்டறிந்து மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி அவர்களின் தேவைகளை கேட்டு ஊருக்கு வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வின் போது சோயா பொறுப்பாளர் சாராதாம்மாள், சோயா மாரிமுத்து மற்றும் சமூகபணியாளர் டேவிட் ஆசீர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)
