» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)



திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் 518-வது ஆனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. 

இதில் ஆயிரக்கணக்ககான பக்தர்கள் கலந்து காெண்டனர். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணிப் பெரும் திருவிழா தேரோட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory