» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநிலங்களவை தேர்தலில் இன்பதுரை, தனபால் போட்டி: அதிமுக தலைமை அறிவிப்பு
ஞாயிறு 1, ஜூன் 2025 3:54:38 PM (IST)
ஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் ம.தனபால், ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இதனை, இன்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும். 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
செவ்வாய் 3, ஜூன் 2025 10:30:11 AM (IST)

சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியது ஏன்? நீதிபதியின் தீர்ப்பில் விளக்கம்!
செவ்வாய் 3, ஜூன் 2025 10:18:31 AM (IST)

முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம்: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
திங்கள் 2, ஜூன் 2025 5:52:19 PM (IST)

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)
