» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)
புதிய வைரஸ்களால் உண்டாகும் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் மிக சாதாரண அளவிலேயே இருக்கும். பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பே இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதாக மக்கள் மத்தியில் சற்று பயம் நிலவுகிறது. இந்த புதிய வகை வைரஸ் (கொரோன) அதிக வீரியம் இல்லாதது என்று ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் மேலும் ஒருவர் பலியால் இருப்பதால் புதிய வைரசுக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில் அதிகபட்சமாக 1.400-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வைரஸ் தாக்கம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் புதிய வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. புதிய வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
இந்தியாவில் தற்போது ஒமைகரான் வைரசின் பிரிவுகளான சில புதிய வைரசுகள் பரவி இருக்கின்றன. இந்த புதிய வைரசுகளால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் இந்த வைரஸ்கள் மிக மிக விரியம் குறைந்தவை. தமிழக மக்களுக்கு ஏற்கெனவே கொரோனா காலத்தில் போதிய அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. பெரும்பாலானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக மக்களிடம் போதிய அளவுக்கு எதிர்ப்பு சக்தி இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சிலருக்கு இணை நோய் காரணமாக இந்த வைரககளின் தாக்கம் ஏற்படக் கூடும். அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. 2 நாட்கள் காய்ச்சல் இருந்தால் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய வைரஸ்களால் உண்டாகும் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் மிக சாதாரண அளவிலேயே இருக்கும். பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பே இல்லை. எனவே தற்போது பரவி வரும் புதிய வைரஸ் பற்றி பொதுமக்கள் பயப்படவோ, பீதி அடையவோ தேவை இல்லை. மூத்த குடிமக்கள் என்றாலும் மூத்த குடி மக்கள் கவனமாகவே இருக்க வேண்டும்.
அதிலும் சாக்கரை நோய் இருப்பவர்கள் அல்லது ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று இருந்தால் அவர்களும் கவனமாக இருப்பது நல்லது.புதிய இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். பொது விழாக்கள் மற்றும் மக்கள் இருக்கும் ரெயில், பஸ் பயணங்களின் போது முகக்கவசம் அணிவதில் தவறு இல்லை. இவ்வாறு டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)