» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில், விளம்பரங்கள், போஸ்டர்கள், கூப்பன்கள் தபால்காரர் மூலம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, பொதுமக்களுக்கு விளம்பரங்கள் சென்றடைய Direct Post எனும் சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் துண்டு பிரசுரங்கள் அல்லது விளம்பரங்கள் போன்றவை ஒரு குறிப்பிட்ட முகவரி இல்லாமல் அனைத்து மக்களுக்கும் விளம்பர அஞ்சல்களை அனுப்ப உதவுகிறது.
நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட ஊர்களிலோ தங்கள் விளம்பரங்களை அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பத்தின்படி தேவைப்படும் Pincodeகளுக்கு மட்டும் டெலிவரி செய்யப்படும். இதற்கு குறைந்தபட்சம் 1000 எண்ணிக்கை தேவை மற்றும் A4, A3 வரையிலான அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ விளம்பரம் செய்ய இந்த Direct Post சேவையை பயன்படுத்தி விளம்பரம் செய்துகொள்ளலாம். விளம்பரம் தேவைப்படும் பகுதியின் அனைத்து வீடுகளுக்கும் இந்த விளம்பரப் பிரசுரங்கள் தபால்காரர் மூலம் பட்டுவாடா செய்யப்படும். போஸ்டர்கள், கூப்பன்கள் போன்றவைகளும் பட்டுவாடா செய்யப்படும்.
நேரடியாக அஞ்சல் பெட்டிகளில் போடப்படும் Direct Postகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர தேவைகளுக்கு இந்த திட்டத்தினை உபயோகித்து பயனடையுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு), வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு எங்கள் வணிக அலுவலரை 9841875710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)