» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர ஆர்வமுள்ள மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வாயிலாக தொடங்கப்பட்டு 870/21 அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, கலை பண்பாட்டு வளாகம், திருநெல்வேலி-7. என்ற முகவரியில் கடந்த 27 ஆண்டுகளாக மிக சிறப்பாக இயங்கி வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிற்றுவிக்கும் கலைகள் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் மற்றும் தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவ – மாணவியர்களுக்கு வயது வரம்பு 12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். மூன்றாண்டுகள் முழு நேரமாக பயில வேண்டும் முதலாம் ஆண்டுக்கு ரு.350/-இரண்டாம் ஆண்டு மற்றும் முன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325/- மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, இரயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி வசதி மாதந்தோறும் மாணவர்களுக்கு தலா ரு.400/- கல்வி உதவித்தொகை அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் முன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு தமிழக அரசுத்தேர்வு இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில்புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் ஓதுவராக பணிபுரியவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோயில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசைபயின்று தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையினை கற்று இசை ஆசிரியர்களாகவும் கலை வல்லுநர்களாகவும் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே கலையில் ஆர்வமுள்ள மாணவ-மாணவியர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்.0462-2900926, மற்றும் கைப்பேசி எண்.9443810926) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
