» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்

சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

2025-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை  மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாசாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா அவர்களின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட வீரதீர செயல்புரிந்த மகளிர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே சமூகநல ஆணையரகத்திற்கு பரிந்துரைக்கப்படும். மேலும், இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படும் மகளிர்க்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கமும் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 

2025-ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் மட்டுமே 16.06.2025-க்குள் விண்ணப்பித்து அதன் விவரத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory