» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!

சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக 9 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்குக் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. சென்னையில் ஏற்கனவே டோரண்ட் கேஸ் என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்காக குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி அந்த நிறுவனமானது விண்ணப்பித்திருந்தது. அதன்படி சுமார் ரூ.35 கோடி செலவில் 23 கிலோமீட்டர் நீலத்திற்கு குழாய் அமைக்கப்படவுள்ளது. இதில் சுமார் 776 மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளுக்குள் வருவதால் இதற்கு கலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த உடன் உடனடியாக குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory