» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலியல் புகார் எதிரொலி: திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்!
புதன் 21, மே 2025 11:22:57 AM (IST)
பாலியல் புகார் எதிரொலியாக அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியின் புகாரைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் தெய்வசெயலுக்கு பதிலாக கவியரசு என்பவர் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் (த/பெ ரத்தினம் 150/1, 172, பெரிய தெரு, காயலூர் குடியிருப்பு (அ) அரக்கோணம்), அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம. கவியரசு (த/பெ மனுவேல் 190, சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத் தெரு. காவலூர். அரக்கோணம்) என்பவர் , அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். எற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வலையில் வீழ்த்தி துன்புறுத்தி வருவதாக மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 24, ஜூன் 2025 3:44:18 PM (IST)

பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! போலிப் பாசம் தமிழுக்கு; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:24:37 PM (IST)

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)
