» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றித்திரிந்தது. இந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில், மணிமுத்தாறு தங்கம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி இன்று சிக்கியது. இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
