» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திங்கள் 19, மே 2025 5:36:50 PM (IST)
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா, "மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும்.
இன்று தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 20-ம் தேதி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மே 21 முதல் மே 25ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த 2 நாட்களில் சென்னையில் வெப்பம் குறைவாக இருக்கும். அதன்பின்னர் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும். தமிழகத்தில் இந்த கோடைக்காலத்தில் 192.7 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்துள்ளது. இது இயல்பை விட 90 சதவீதம் அதிகம் ஆகும்’ எனத் தெரிவித்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
