» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு

ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். பாவூர்சத்திரத்தை சேர்ந்த இவர் கடந்த 2023ம் ஆண்டு தனது குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பரின் 15 வயது மகளுக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று துப்பாக்கியை வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்தும் போலீசார் நீலகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகியும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான நீலகண்டன் மீது ஆலங்குளம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory