» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது: பொதுக்குழு தீர்மானம்!
சனி 17, மே 2025 12:26:41 PM (IST)

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள புனித ஓம்கான்வென்ட் பள்ளியில் வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகணேசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சூர்ய பிரம்மன் வரவேற்புரையாற்றினார். இச்சங்கத்தின் செயல்பாடு பற்றி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் விளக்க உரையாற்றினார். இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் முஜிபுர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட செயலாளர் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) கௌதமன் நன்றி கூறினார்.
இதில் தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு பணிநெருக்கடி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சி உருவாகி 8 ஆண்டுகளாகியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தில் மாநகர ஈட்டுப்படி மற்றும் அதற்குரிய வீட்டு வாடகை வழங்கப்படவில்லை.அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைந்து உரிய ஊதியம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 30ம் தேதி தொடக்கம் : ஆட்சியர் ஆலோசனை!
திங்கள் 23, ஜூன் 2025 4:46:24 PM (IST)
