» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!

சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

பழவூர் பகுதியில் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம், பழவூர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் ஈடுபட்ட யாக்கோபுரம், வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்த பால்சுபி (35) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பால்சுபியை பழவூர் காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று (16.5.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory