» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 13, மே 2025 3:58:04 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்த நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சுரேந்திர மோகன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற காவலில் உள்ள ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்டு சாட்சியளித்த பெண்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் சிறப்பாக முன்வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சிபிஐ விசாரணை துவங்கியது முதல் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் வழக்கு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 சாகும்வரை ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு சாகும்வரை 5 ஆயுள் தண்டனையும் 3வது குற்றவாளி சதீஷ்-க்கு சாகும்வரை மூன்று ஆயுள் தண்டனையும் 4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு சாகும்வரை இரண்டு ஆயுள் தண்டனையும், 5-வது குற்றவாளி மணிவண்ணனுக்கு சாகும்வரை ஐந்து ஆயுள் தண்டனையும் ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் ஏழாவது குற்றவாளி ஹெரன்பாலுக்கு சாகும்வரை மூன்று ஆயுள் தண்டனையும் எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் 9வது குற்றவாளி அருண்குமாருக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு ரூ.40,000மும், 2வது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ரூ.30,500ம், சதீஷ்-க்கு ரூ.18,500ம், வசந்தகுமாருக்கு ரூ.13,500ம், மணிவண்ணனுக்கு ரூ.18,000ம், பாபுவுக்கு ரூ.10,500ம், ஹெரான் பாலுக்கு ரூ. 14,000ம், அருளானந்தத்துக்கு ரூ.5,500 ம், அருண்குமாருக்கு ரூ.5,500ம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையாக ரூ.85 லட்சம் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் சாட்சி சொல்ல வராத ஒரு பெண்ணைத் தவிர்த்து மற்ற 7 பெண்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றது.
அதன்படி, சாட்சியம் சொல்ல வந்த பெண்களில், ஏ என்ற பெண்ணுக்கு ரூ.2 லட்சம், பி என்ற பெண்ணுக்கு ரூ.15 லட்சம், சி என்ற பெண்ணுக்கு ரூ.10 லட்சம், டி என்ற பெண்ணுக்கு ரூ.10 லட்சம், இ என்ற பெண்ணுக்கு ரூ.8 லட்சம், ஜி என்ற பெண்ணுக்கு ரூ.15 லட்சம், எச் என்ற பெண்ணுக்கு ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் (எஃப் என்ற பெண்) சாட்சி சொல்ல வர வில்லை. அவருக்கு இழப்பீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
