» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. அதன்படி, கால்நடை உதவி மருத்துவா், நகா் மற்றும் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா், புள்ளியியல் துறை உதவி இயக்குநா் உள்பட 32 பதவிகளுக்கான 330 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். தோ்வாணைய இணையதளத்தில் மே 13 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். தோ்வுக்கான கட்டணத்தை ‘யுபிஐ’ செயலி மூலம் செலுத்தலாம்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவையாகும். எழுத்துத் தோ்வு தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். தோ்வா்களின் நலன் கருதி, முதல்முறையாக பாடத் திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை தோ்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


