» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)

உயிலின் அடிப்படையில் திருநெல்வேலி இருட்டுக்கடை தனக்கே சொந்தம் என்று தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் கூறியுள்ளார்.
நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது.
இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். நெல்லையின் முக்கிய அடையாளமாக இருட்டுக்கடை அல்வா திகழ்ந்து வருகிறது.இந்த நிலையில், இருட்டுக்கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் நாளிதழ்களில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இருட்டு கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங் மறைவுக்கு பின் அவரது மகன் பிஜிலி சிங் இருட்டு கடையை நடத்திவந்தார். பிஜிலி சிங் மறைவுக்குப் பின்பு அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சென்று சேர வேண்டும் என 1999 ஆம் ஆண்டு சட்டப்படி சாட்சிகள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார். பிஜிலி சிங் மனைவி சுலோச்சனா பாய் மறைவுக்கு பின் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் ஜெயராம் சிங்க்கு சென்று சேர வேண்டும் என உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சுலோச்சனா பாயும் உயிரிழந்த நிலையில் இருட்டுக்கடை ஸ்தாபனம் மற்றும் சொத்துகள் அனைத்தும் ஜெயராம் சிங் தரப்புக்கு அதாவது அவரது மகனுக்கு வர வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உரிமையாளரான கவிதா என்பவர் தனக்கு மட்டும் இருட்டுக்கடை சொந்தம் என கூறி வருகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால், உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்குக்கு மட்டும் இருட்டுக்கடை உரிமை பாத்தியபட்டது. இருட்டுக்கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் கடையை உரிமை கோர சண்டை செய்து வருவதாக தகவல் பரவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து இருட்டுக்கடை ஸ்தாபனம் குறித்த நடவடிக்கையை நயன் சிங் எடுக்க உள்ளார்.
இருட்டுக்கடை ஸ்தாபனம் சம்பந்தமாக நயன் சிங் சகோதரி கவிதா என்பவருக்கு எந்தவித தொடர்பும் யாரும் வைத்துக் கொள்ள வேண்டாம் என பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அதனை மீறுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
