» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?

செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)



ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கட்சி கொடி, டி- சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மலேசியா அரசு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படத்தில் டிரெய்லர் வருகிற 2026 ஜனவரி 1ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ‘ஜன நாயகன்’ படத்திற்கான வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விழா சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி- சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், அவர் அரசியல் தொடர்பாக பேசுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகிய மூவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory