» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கீதாஜீவன்

வியாழன் 17, ஏப்ரல் 2025 12:37:49 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது அவர், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை பெறும் வகையில் ரூ.131.25 கோடியில் தன்னிறைவு அடையும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தசைச்சிதைவு மறறும் முதுகு தண்டுவட பாதிப்பால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியாகவும், 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால்(பேட்டரி) இயங்கும் உபகரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட நடக்க இயலாத 18 வயதுக்கு மேற்பட்ட 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பில் இந்த உபகரணம் வழங்கப்படும்.

தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory