» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு

வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

தூத்துக்குடி என்.டி.பி.எல்.  அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 23-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் செயல்படும் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின் நிலையத்தில் சுமாா் 1350க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். 

என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 23வது நாளாக ஸ்ட்ரைக் தொடர்கிறது. இதன்  காரணமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.  

என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 யூனிட்டுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory