» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 8:09:48 PM (IST)



தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும் என பிரதமர் மோடி பேசினார்..

ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.

பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது. தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும் என்று அவர் பேசினார். குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிApr 7, 2025 - 05:33:30 PM | Posted IP 162.1*****

அள்ளி விடுறதுல்ல சீமான் தோத்துருவான் அன்னைக்கு இருந்த விலைவாசி எவ்வளவு? இன்னைக்கு எவ்வளவு? அன்னைக்கு டாலர் மதிப்பு எவ்வளவு? இன்னைக்கு எவ்வளவு? தைரியம் இருந்தால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அப்போது கொடுத்த சம்பளத்தை கொடுப்பேன் என்று கொடுத்து பாரும் அப்போது தெரியும் யார் அதிகம் கொடுத்தது என்று நமக்கு தான் ஒரு மண்ணும் தெரியாதுல்ல. தெரிஞ்சதெல்லாம் மதம் மதம் மட்டும் தானே

அதுApr 7, 2025 - 12:30:34 PM | Posted IP 172.7*****

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் களவாணி பயலுக.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory