» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை
சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)
தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள் என்பவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது வழக்கை விசாரணை செய்த நீதிபதி தாண்டவன் இந்த வழக்கில் தொடர்புடைய 11வது குற்றவாளியான தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் 1வது நபர் தற்போது நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜெய சேகரன், ஓய்வு பெற்ற காவலர் ஜோசப்ராஜ், தற்போது உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா, ஓய்வு பெற்ற காவலர் செல்லதுரை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரபாகு, ஓய்வு பெற்ற காவலர் சுப்பையா, ஓய்வு பெற்ற காவலர் பாலசுப்பிரமணியம் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரான ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஒன்பதாவது நபர் ஆன இரத்தினசாமி ஓய்வு பெற்ற காவலர் ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியல் ஆஜரானார். தீர்ப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "இவ்வழக்கின் தீர்ப்பு தாமதமாக வழங்கட்டாலும் நீதி வென்றுள்ளது. இதில் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர் தண்டனை பெற்றுள்ளார்கள். 7பேர் பணி ஓய்வு பெற்றுள்ளார்கள் என்றார்.
தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு பின்பு காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கில் காவல்துறையினர் 9 பேருக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)

விஜய்க்கு நடிக்கவும், ஏமாற்றவும் மட்டுமே தெரியும் : தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:27:55 PM (IST)

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : கனிமொழி எம்பி வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:20:56 PM (IST)

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:12:55 PM (IST)

இதுApr 5, 2025 - 07:02:14 PM | Posted IP 162.1*****