» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சனி 5, ஏப்ரல் 2025 11:25:34 AM (IST)
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின்போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் என்ஆர்ஐ வங்கிக் கணக்கு செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆட்சியரின் என்ஆர்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், என்ஆர்ஐ உதவித் தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி, அந்த முறைகேடு நடந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், திருவள்ளூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தினேஷ் என்பவரை என்ஆர்ஐ உதவித் தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்து, போலி ஆவணங்கள் வழங்கி, அவர் மூலம் பணம் மோசடி செய்திருந்த வருவாய் ஆய்வாளர்கள் இரண்டு பேர் ரூ.11.63 லட்சம் பண மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேன் ஓட்டுநர் தினேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)

விஜய்க்கு நடிக்கவும், ஏமாற்றவும் மட்டுமே தெரியும் : தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:27:55 PM (IST)

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : கனிமொழி எம்பி வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:20:56 PM (IST)

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை: ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:12:55 PM (IST)
