» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு

சனி 5, ஏப்ரல் 2025 8:43:05 AM (IST)

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தூத்துக்குடியில் நாளை (6ஆம் தேதி) கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 

இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய வக்பு வாரிய சட்டங்களை திரும்ப பெற கோரியும், இந்தி திணிப்பு, கட்டாய முன்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான பேரிட நிவாரண நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்காக முக்கிய நிதியை வழங்காமல் இருப்பது கிராமப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்காதது, 

மாநிலத் திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரில் இருப்பதால் இத்திட்டத்தை முடக்கி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூபாய் 4034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிற வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், 

வருகின்ற ஏப்ரல் 6-ம்தேதி தமிழ்நாட்டிற்கு வருகைத் தரும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை கண்டித்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் முன்னிலையில் வி.வி.டி.சிக்னல் அருகில் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள், அனைத்து துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் ,கிராம கமிட்டி தலைவர்கள் வார்டு தலைவர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory