» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பதவி ஏற்றுக் கொண்டார்.
நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலராக இருந்த வினோத் திருச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா நெல்லை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து பானுபிரியா நேற்று பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பானுபிரியா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ. இளநிலை பட்டப்படிப்பும், நெல்லை மருதகுளம் பொறியியல் கல்லூரியில் எம்.இ. முதுநிலை பட்டப்படிப்பும் படித்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தென்காசியில் பணிபுரிந்த நிலையில் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் சமீபத்தில் நடந்த குற்றாலம் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணியில் களத்தில் இறங்கி உள்ளார். மேலும் இவர் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)

தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 65ஆக தளர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு!!
சனி 1, நவம்பர் 2025 3:47:12 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)


.gif)
SRINIVASANMar 19, 2025 - 11:15:55 AM | Posted IP 104.2*****