» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு

புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)



தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக இன்று கால்கோள் விழா நடைபெற்றது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான கால்கோள் விழா சுவாமி சன்னதி முன்பு இன்று காலை நடைபெற்றது. கால் கோள் விழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் ஆட்சியர் கமல் கிஷோர், அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கால்கோள் நட்டினார்கள். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory