» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

திசையன்விளை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (46). அங்குள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை அவர் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே திசையன்விளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்சன் (20), மற்றும் கரன் (23) ஆகியோர் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
வாழைத்தோட்டம் அருகே இரு பைக்குகளும் நேர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி முதல்வர் லிவிங்ஸ்டன் மற்றும் மாணவர் ஜெய்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

விஜய் காரை மறித்து தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி போராட்டம்: பனையூரில் பரபரப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:16:59 PM (IST)


.gif)