» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஞானசேகரனுக்கு 6 போலீசாருடன் தொடர்பு: வலிப்பு வந்தது போல நாடகமாடியது அம்பலம்
வெள்ளி 24, ஜனவரி 2025 11:08:15 AM (IST)
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்தது போல நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இக்குழுவினர், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் எஃப்ஐஆர் வெளியான வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது, செல்போன், லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் யார்? என்பது குறித்து வீடியோவை நேரடியாகக் காண்பித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று முன்தினம் அதிகாலை ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனை அனுமதித்தனர். அங்கு கைதிகள் வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதும் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக போலீசார் கூறினர். மேலும், விசாரணையை திசை திருப்பும் நோக்கில் அவர் வலிப்பு ஏற்பட்டதுபோல நாடகமாடியுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார், ஞானசேகரனை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில், அடையாறு போலீசார் 6 பேருடன் ஞானசேகரன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அந்த 6 போலீசாரையும் அடையாளம் கண்டு, அவர்களது செல்போன்களைப் பறிமுதல் செய்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஃப்ஐஆர் வெளியான வழக்கில் ஏற்கெனவே 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் மருதுபாண்டியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:54:19 PM (IST)

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)

பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேச்சு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:00:28 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:49:42 AM (IST)

திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)

தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசவில்லை; மக்களின் கவலைதான் வீசுகிறது : தமிழிசை பேட்டி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:14:58 AM (IST)
