» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 22, ஜனவரி 2026 4:04:51 PM (IST)
தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
22-01-2026 மற்றும் 23-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.
22-01-2026 மற்றும் 23-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி - இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
22-01-2026 மற்றும் 23-01-2026: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வியாழன் 22, ஜனவரி 2026 4:46:46 PM (IST)

சென்னை புத்தககண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் வெளியிடு!
வியாழன் 22, ஜனவரி 2026 4:07:25 PM (IST)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!
வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?
வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)

போதை புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் தமிழ்நாடு முதலிடம் - சீமான் விமர்சனம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:07:21 PM (IST)