» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் : தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!!
வெள்ளி 10, ஜனவரி 2025 5:35:16 PM (IST)
விக்கிரவாண்டி பள்ளிச்சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 3 பேரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார்.
பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
