» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை சீமையில் கிறித்தவம் நூல்: கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:20:44 AM (IST)

சென்னையில், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய "நெல்லை சீமையில் கிறித்தவம்" என்று நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.
சென்னை கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் காவ்யா பதிப்பகம் சார்பில் 12 புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தங்களை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை சீமையில் கிறித்தவம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த நூலை அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்தி, சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் பவள விழா நாயகன் காவ்யா சண்முகசுந்தரம், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சங்கர்மணி, திரைப்பட உதவி இயக்னுர் ரூபன், டாப் டிவி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காவ்யா சண்முக சுந்தரம் தலைமையில் காவ்யா பதிப்பகம் செய்து இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.
வெள்ளி 2, ஜனவரி 2026 5:22:59 PM (IST)

அமித்ஷா வருகைக்கு பின்பு தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் போகிறது: தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
வெள்ளி 2, ஜனவரி 2026 4:56:55 PM (IST)

வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 13பேர் காயம்
வெள்ளி 2, ஜனவரி 2026 4:46:50 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு
வெள்ளி 2, ஜனவரி 2026 4:36:07 PM (IST)

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:22:46 PM (IST)

சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 12:49:28 PM (IST)

