» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை : 4பேர் கும்பல் வெறிச்செயல்!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 11:50:17 AM (IST)

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த 4பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ராேட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). இன்று காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் சாலையில் நடந்த சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலைக்கு காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், போடம்மாள் புரத்தை சேர்ந்த தங்க பாண்டி மகன் கார்த்திக் குமார் (24), முருகேசன் மகன் ராஜேஷ் (28), மற்றும் அவர்களது நண்பரான சதீஷ்குமார் (24), பாண்டி (23), குமார் (25), சதீஷ்குமார் (26) ஆகியோர் அங்குள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்காளம். 

அப்போது அங்கு வந்த வெள்ளைக்கண்ணு மற்றும் அவரது நண்பரான வனராஜா, உதயகுமார், சுரேஷ் என்ற பன்னி சுரேஷ், கேபிரியல், ஜெயராஜ் ஆண்ட்ரூஸ், பாரதி கார்த்திக், சந்தனகுமார், பாலமுருகன் ஆகிய 9 பேர் அவர்களிடம் தகராறு செய்து, ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். 

இந்நிலையில், வெள்ளக்கண்ணு உட்பட 9பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதை அறிந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் சென்று வீட்டிலிருந்து வெளிய வந்த வெள்ளைகண்ணுவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு 4 பேரும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜ்குமார் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

DhineshDec 4, 2024 - 08:10:36 AM | Posted IP 172.7*****

Drugs tha main reason

SeenivasagamDec 4, 2024 - 06:59:02 AM | Posted IP 172.7*****

டாஸ்மாக் வாழ்க

இது தான் திராவிட மாடல்Dec 3, 2024 - 05:42:58 PM | Posted IP 162.1*****

ஆரம்பத்தில் இருந்து தமிழ் நாடு அரசு டாஸ்மாக் மது தான் எல்லாத்துக்கும் காரணம்.

செத்தான் சேகர்Dec 3, 2024 - 03:29:12 PM | Posted IP 162.1*****

செத்தது ஒருவர், காென்னது 4பேர். இது எதுக்கு 9பேர்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory