» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய்க்கு நிச்சயமாக அரசியல் கை கொடுக்கும் : ஆனந்த் ராஜ் பேட்டி
வெள்ளி 29, நவம்பர் 2024 3:24:21 PM (IST)
"சீமானை நடிகராக தான் தெரியும், நடிகர் விஜய்க்கு நிச்சயமாக அரசியல் கை கொடுக்கும்" என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள். இது கட்டட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம். சினிமா தற்போது நன்றாக உள்ளது. அதனால்தான் அரசியலில் இல்லாமல் அதை பார்த்து வருகிறேன் என்றும் சீமானை நடிகராக தான் தெரியும், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவருடன் சில விஷயங்களை நேரில் பேசி பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாகவும், தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்கு தமிழ்காரர்களை விட வட இந்தியர்கள், அயல் நாட்டினர் அதிகயளவில் வருகின்றனர்.இது மிகப்பெரிய பெருமை என்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி என்று ஆனந்த் ராஜ் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 1, ஜனவரி 2026 12:05:36 PM (IST)

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
வியாழன் 1, ஜனவரி 2026 12:00:06 PM (IST)

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.249 கோடி ஒதுக்கீடு
வியாழன் 1, ஜனவரி 2026 11:09:47 AM (IST)

முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 31, டிசம்பர் 2025 5:12:22 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)



.gif)