» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே ஓடும் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!

செவ்வாய் 19, நவம்பர் 2024 10:28:30 AM (IST)

நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட மும்பை ரயில், நெல்லை சந்திப்புக்கு வந்தது. பின்னர் பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

நெல்லையை அடுத்த தாழையூத்து ரயில் நிலையம் அருகில் சென்றபோது ஏ-1 ஏ.சி. பெட்டியின் அடியில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதையடுத்து உடனடியாக அந்த ரயில் தாழையூத்து ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயில் பெட்டியின் அடியில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்த பயணிகள் அலறியடித்தவாறு அவசரமாக கீழே இறங்கினர்.

இதற்கிடையே ரயில் கார்டு, சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்தார். அவர் அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து புகை வெளியேறிய பகுதியில் ரசாயனத்தை பீய்ச்சி அடித்தார். இதனால் சிறிது நேரத்தில் புகை கட்டுக்குள் வந்தது.

ஏற்கனவே பிரேக் பிடித்தபோது சக்கரத்துடன் இணைந்த பிரேக் ரப்பர் பகுதி மீண்டும் விலகாமல் இணைந்திருந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த புகை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப பணியாளர்கள் கோளாறை சரி செய்து மீண்டும் ரயிலை இயக்கினார்கள். 30 நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு ரயில் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. ஓடும் ரயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory