» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 3:48:11 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

அதன்படி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 1 ) பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory