» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆடம்பரப் பகட்டு கார் ரேஸ், அயல்நாட்டில் போட்டோஷுட்: இ.பி.எஸ்., விமர்சனம்
திங்கள் 2, செப்டம்பர் 2024 5:00:15 PM (IST)
வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் திமுக அரசு கவனம் செலுத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது. இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.
வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் அரசுக்கு எனது கடும் கண்டனம். அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
