» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் நகராட்சி கழிப்பிடங்களில் கட்டண விவரம் : ஆணையாளர் உத்தரவு
வியாழன் 8, ஜனவரி 2026 7:43:10 AM (IST)
திருச்செந்தூர் நகராட்சி கழிப்பிடங்களில் மக்கள் பார்வைக்கு கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் பகத்சிங் பேருந்து நிலையம், ஆவுடையார்குளம், எடிசன் மருத்துவமனை அருகில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ளிட்ட 11 இடங்களில் நகராட்சி சார்பில் கட்டண குளியல் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை ஏலம் எடுத்து குத்தகைதாரர்கள் நடத்தி வருகின்றனர். இந்த கழிப்பிடங்களில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் வீடியோ காட்சி பரவியது.இந்நிலையில், கட்டண கழிப்பிடங்களை ஆய்வு செய்த ஆணையாளர், கட்டண விவரத்தை மக்கள் பார்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டார். கழிப்பிடத்துக்கு ரூ. 5, ரூ. 10, குளிப்பதற்கு ரூ. 10 என்ற விவரம் இடம்பெற வேண்டும். புகாருக்கு 9363779191 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)

