» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: தூத்துக்குடி தம்பதி கைது!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:24:26 AM (IST)
பூதப்பாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (37). பட்டதாரியான இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சுப்பையார்புரம் 2-வது தெருவை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது, செலின் சரத்ராஜூம் அவரது மனைவியும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜகோபாலிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தம்பதி பணமோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி ராஜகோபால் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செலின் சரத்ராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தூத்துக்குடிக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று செலின் சரத்ராஜ், மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து பூதப்பாண்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)
