» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகரிக அரசியல் பற்றி பேச தி.மு.க.,விற்கு தகுதியில்லை : சீமான் சாடல்

சனி 13, ஜூலை 2024 4:06:09 PM (IST)

நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "அந்த பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாட்டை பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக. ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அன்றைக்கு தி.மு.க.,வினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை. அதை நாங்கள் திருப்பி பாடும் போது கோபம் வருகிறது.

அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க., தான். ஒவ்வொரு தலைவர்களை பற்றி கருணாநிதி பேசி உள்ளார்.  கருவாட்டுகாரியின் சீமந்தபுத்திரர், மரமேறி கட்டபீடி என விமர்சித்துள்ளார்.

இழிவாக பேசுவதற்கு தி.மு.க., ஆட்களை வைத்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றனர். நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை.

சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு தெரியாது. சண்டாளன் என கிராமங்களில் இயல்பாக பேசுவர். சினிமா படங்களில் பாடல்கள் வந்துள்ளன. சங்க இலக்கியங்கள், மந்திரங்கள், கந்த சஷ்டியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி அதிகமாக பயன்படுத்தி உள்ளார். படங்களிலும் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார். சண்டாளன் என நாங்கள் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போது எங்கு சென்றீர்கள். காதில் பஞ்சுவைத்து படுத்து கொண்டீர்களா. இவ்வாறு சீமான் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory