» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:30:14 PM (IST)
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பரமக்குடியில் சாலைப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்பி ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஐந்து சுயேச்சைகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


