» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

தூத்துக்குடி முன்னாள் அதிமுக நகர மன்றத் தலைவர் மனோஜ் குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இணைப்பு விழாவில் அமைச்சர் மற்றும் த.வெ.க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தூத்துக்குடி மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்து, புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில், அதிமுக முக்கிய நிர்வாகிகளான கு. கென்னடி, பி. சார்லஸ், பி. லியோ உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்களும், 24 மற்றும் 25-வது வார்டுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் த.வெ.க-வில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிமுகவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மாற்றுக்கட்சியில் இணைந்த சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)


