» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் நவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கத் தொடங்கியுள்ளது.
பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, பாலருவி விரைவு ரயிலில் கூடுதல் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இப் புதிய மாற்றத்தை வரவேற்கும் விதமாகத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில் எஞ்சின், பெயர்ப் பலகைகளுக்கு மாலை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க துணைத் தலைவர் எஸ்.அந்தோணி முத்துராஜா, செயலாளர் மா.பிரமநாயகம், பொருளாளர் வே.லட்சுமணன், நிர்வாகச் செயலாளர் J.A.N.ஆனந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.ராஜா மோகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக இணைக்கப்பட்ட மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் முதன்முறையாகத் தூத்துக்குடியில் இருந்து 40 பயணிகள் பயணித்தனர். எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றியமைத்த தென்னக ரயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா.பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
இரா.முருகன் பணகுடி.Jul 22, 2026 - 07:23:23 AM | Posted IP 162.1*****
முயற்சி திருவினை ஆக்கும். ஆம்.பயணியர்கள் சங்கத்தின் உயர்ந்த எண்ணங்கள் அனைத்து மக்களுக்காவது.உங்களுடைய உறுதியான முன்னெடுப்புகள் மேலும் வெற்றியடைய மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கும். உங்களுக்கான வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)



ராமராஜன் சென்னைJul 22, 2026 - 07:28:54 AM | Posted IP 104.2*****