» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வ.உ.சி பெயர் இருட்டடிப்பு விவகாரம்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் வ.உ.சி. எழுச்சி பேரவை கோரிக்கை மனு!
வியாழன் 9, ஜூலை 2026 8:36:55 AM (IST)
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடப் பலகைகளில் 'புதிய துறைமுகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயரை உடனடியாக நீக்கிவிட்டு, 'வ.உ.சிதம்பரனார் துறைமுகம்' என்று குறிப்பிடக் கோரி தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை சார்பாக மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடங்கள், பேருந்தின் பெயர் பலகைகளில் 'புதிய துறைமுகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய துறைமுகம் என்ற பெயர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் 'வ.உ. சிதம்பரனார் துறைமுகம்' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வப் பெயர் மாற்றச் செய்தி கூடத் தெரியாமல் தூத்துக்குடி மாநகராட்சிப் போக்குவரத்து வழித்தடங்கள், பேருந்துகளில் 'புதிய துறைமுகம்' எனக் குறிப்பிட்டு வ.உ.சிதம்பரனாரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளனர். எனவே, தற்போது பேருந்து வழித்தடங்கள், பேருந்துகளில் உள்ள 'புதிய துறைமுகம்' என்ற பெயரை உடனடியாக நீக்கிவிட்டு 'வ.உ.சிதம்பரனார் துறைமுகம்' என்று குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சு தாக்குதலில் 5பேர் காயம்!
திங்கள் 6, ஜூலை 2026 12:01:28 PM (IST)



உண்மை விளம்பிJul 9, 2026 - 11:18:21 PM | Posted IP 162.1*****