» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

திங்கள்சந்தை உடையார்பள்ளம் அருகே உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பைத் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை உடையார்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக வழக்கம் போல் வலையை விரித்துச் சென்றுள்ளார். பின்னர் குளத்திற்கு வந்து வலையை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் ஏதோ ஒரு பெரிய உருவம் சிக்குண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நெருங்கிச் சென்று பார்த்தபோது, மீன்களுக்குப் பதிலாக சுமார் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் உடையார்பள்ளம் பெரியகுளப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)


