» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓணம் பண்டிகை எதிரொலி: தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!
சனி 22, ஆகஸ்ட் 2026 10:55:23 AM (IST)
ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தோவாளை பூச்சந்தைக்குக் குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஓணம் பூக்கோலங்களுக்காகக் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரளாக வந்து பூக்களைப் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.
தேவை அதிகரிப்பு காரணமாக தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிச்சிப் பூ கிலோ ரூ. 750-லிருந்து ரூ. 500 உயர்ந்து, தற்சமயம் ரூ. 1,250-க்கு விற்பனையாகிறது. முல்லைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 450 உயர்ந்து, ரூ. 1,150-க்கு விற்பனையாகிறது. மல்லிகைப் பூ கிலோ ரூ. 700-லிருந்து ரூ. 200 உயர்ந்து, ரூ. 900-க்கு விற்பனையாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)


